Home இந்தியா “ஜெயலலிதாவை பிணையில் விடுவிக்க வேண்டும்” – ராம் ஜெத்மலானி ஒரு மணி நேரம் வாதம்!

“ஜெயலலிதாவை பிணையில் விடுவிக்க வேண்டும்” – ராம் ஜெத்மலானி ஒரு மணி நேரம் வாதம்!

567
0
SHARE
Ad

Ram-Jethmalaniபெங்களூரு, அக்டோபர் 7 – இன்று பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பிணை (ஜாமீன்) வழங்கப்பட வேண்டுமென பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஒருமணி நேரம் வாதம் புரிந்து வழக்காடியுள்ளார்.

ராம் ஜெத்மலானி, இந்தியாவிலேயே அதிகக் கட்டணம் பெறும் வழக்கறிஞர்களில் ஒருவராவார். இவர்தான் இன்று பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவைப் பிரதிநிதித்து வழக்காடுகின்றார்.

சொத்துக் குவிப்பு வழக்கு சுப்ரமணிய சாமியால் தன்னிச்சையாகப் போடப்பட்ட வழக்கு என்றும் இது அதிகாரிகளால் முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும் வாதிட்ட ராம்ஜெத்மலானி, ஜெயலலிதாவுக்கு உடனடியாக பிணை வழங்க வேண்டும் என்று சமர்ப்பித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஜெயலலிதாவின் கணக்குகள் முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் ராம் ஜெத்மலானி சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த வழக்குகளில் இருந்து மேல் முறையீட்டில் ஜெயலலிதா விடுவிக்கப்படும் சாத்தியம் இருப்பதாலும், அவரது உடல் நிலை, வகிக்கும் பதவிகள், வயது ஆகிய காரணங்களை முன்னிறுத்தி அவர் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஜெத்மலானி வாதிட்டுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் தனது வாதங்களை அவர் சமர்ப்பித்துள்ளார். அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும் தனது சார்பிலான வாதங்களைச் சமர்ப்பித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு இன்று விடுதலை பெற்றுத் தரும் வியூகமாக, அவரது பிணை மனு தொடர்பில் மட்டுமே ராம் ஜெத்மலானி வாதிட்டார் என்றும், தண்டனை மீதான மேல் முறையீடுகள் விசாரிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து சசிகலாவைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் அமித் தேசாய் சசிகலாவின் பிணை மனு மீதான தனது வாதத்தைச் சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளார்.