Home உலகம் தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் இன்று பதவி ஏற்பு

தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் இன்று பதவி ஏற்பு

588
0
SHARE
Ad

seolசியோல், பிப். 25- தென்கொரியா அதிபர் பதவிக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் மூன் ஜே-வை தோற்கடித்து பார்க் கியூன்-ஹே (61) என்ற பெண்மணி வெற்றி பெற்றார்.

அதனையடுத்து, அதிபர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் பார்க் கியூன்-ஹே, தென் கொரியாவின் அதிபராக பதவி ஏற்றார்.

#TamilSchoolmychoice

அந்நாட்டின் அதிபர் பதவியை ஏற்கும் முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த பதவியேற்பு விழாவில் அவர் பேசுகையில், ‘நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க மாட்டேன்.

வடகொரியா நடத்தியுள்ள அணுகுண்டு சோதனை தென்கொரியாவின் எதிர்காலத்துக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் விடுவிக்கப்பட்ட சவாலாக உள்ளது. இந்த சவாலுக்கு வடகொரியாவே இரையாகும் சூழ்நிலை உருவாகி விடும்.’ என்று கூறினார்.