Home நாடு பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் அடுத்தவாரம் திரும்ப ஒப்படைக்கப்படலாம்!

பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் அடுத்தவாரம் திரும்ப ஒப்படைக்கப்படலாம்!

539
0
SHARE
Ad

Alkitab_azmi_1பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 5 – பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மலாய் மற்றும் இபான் பைபிள்கள் அடுத்த வாரம் மலேசிய பைபிள் சமூகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் அஸ்மின் அலி இந்த விவகாரம் குறித்து மாநில கூட்டத்தில் கலந்தாலோசித்தார். அந்த கூட்டத்தில் சிலாங்கூர் ஜாயிஸ் மற்றும் மாயிஸ் இஸ்லாம் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பைபிளில் கடவுளைக் குறிக்க ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக மலேசிய பைபிள் சமூகத்திடமிருந்து 321 பைபிள்கள் ஜாயிஸ் அமைப்பினரால் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் குறித்து அடுத்த வாரம் வியாழக்கிழமை அஸ்மின் அலி, சிலாங்கூர் சுல்தானை சந்திக்கவுள்ளார்.

மேலும் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து வரும் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டவும் சிலாங்கூர் சுல்தானிடம், அஸ்மின் அலி கலந்தாலோசிக்கவுள்ளார்.

இஸ்லாமிற்கு சொந்தமில்லாத அந்த பைபிள்களை மீண்டும் கிறிஸ்தவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், மலேசியாவிலுள்ள மற்ற மதத்தினருக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அஸ்மின் அலி கடந்த திங்கட்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற விழா ஒன்றில் அங்கு கூடியிருந்த கூட்டத்தினரிடையே தெரிவித்தார்.