Home நாடு கள்ளக் குடியேறிகளை டிசம்பர் 31-க்குள் ஒப்படைக்க வேண்டும் – குடிநுழைவு இலாகா எச்சரிக்கை‏

கள்ளக் குடியேறிகளை டிசம்பர் 31-க்குள் ஒப்படைக்க வேண்டும் – குடிநுழைவு இலாகா எச்சரிக்கை‏

580
0
SHARE
Ad

Immigration Logoகோலாலம்பூர், நவம்பர் 20 – கள்ளக் குடியேறிகளை மலேசியாவிற்கு கொண்டு வரும் முகவர்கள் இனி தப்பிக்க முடியாது என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குடிநுழைவு இலாகா தலைமை இயக்குநர் டத்தோ முஸ்தபா இப்ராகிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் கள்ளக்குடியேறிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக அவர்களை வேலைக்கு அமர்த்தியிருப்பது கண்டறியப்பட்டால் முதலாளிகளுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் குடிநுழைவு இலாகா அறிவித்துள்ளது.

இதனிடையே, நேற்று முன்தினம் இரவு தலைநகர் செந்தூல் ராயாவில் இரவு 9 மணியளவில் குடிநுழைவு இலாகா மேற்கொண்ட சோதனையில் 35 இந்தோனேசியர்கள், 16 வங்காளப் பிரஜைகள், ஒரு மியான்மர் பிரஜை, ஒரு இந்தியப் பிரஜை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.