Home உலகம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் – நவாஸ் ஷெரீப்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் – நவாஸ் ஷெரீப்

482
0
SHARE
Ad

modi nawazpஇஸ்லாமாபாத், நவம்பர் 29 – நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டில் சார்க் உச்சி மாநாட்டுக்கு சென்றிருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியும், நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து கை குலுக்கி, நலம் விசாரித்தனர்.

சார்க் மாநாட்டில் இது முக்கிய அம்சமாக பேசப்பட்டது. இந்த மாநாட்டை முடித்துக்கொண்டு நவாஸ் ஷெரீப் நாடு திரும்பும் போது விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தபோதெல்லாம், பாகிஸ்தான், காஷ்மீர் தலைவர்களுடன் பேசி வந்துள்ளது. காஷ்மீர் தலைவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால், அவர்களின் கருத்துக்களை அறிய பாகிஸ்தான் முயன்றது புதிதான ஒன்றல்ல”.

#TamilSchoolmychoice

“இதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்திருக்கக்கூடாது. கண்ணியத்துடனும், மதிப்புடனும், சுய மரியாதையுடனும் பேச்சுவார்த்தை தொடர்வதையே பாகிஸ்தான் விரும்புகிறது”.

“நாங்கள் அதில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதை என்ன விலை கொடுத்தேனும் தொடர்ந்து செயல்படுத்துவோம்.காஷ்மீர் பிரச்சனை உள்பட அனைத்து பிரச்சனைகளையும் இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண பாகிஸ்தான் விரும்புகிறது என நவாஸ் ஷெரீப் கூறினார்.