Home இந்தியா டுவிட்டரில் ஐஎஸ்ஐஎஸ் கோட்பாடுகளை வெளியிட்டவர் கைது – கர்நாடக காவல்துறை அதிரடி!

டுவிட்டரில் ஐஎஸ்ஐஎஸ் கோட்பாடுகளை வெளியிட்டவர் கைது – கர்நாடக காவல்துறை அதிரடி!

483
0
SHARE
Ad

Mehdi Masroor Biswasபெங்களூரு, டிசம்பர் 14 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கோட்பாடுகளை டுவிட்டர் மூலம் வெளியிட்டு வந்த பெங்களூரைச் சேர்ந்த மெஹடி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற நபரை (படம்) கர்நாடக காவல்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 செய்தி நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன்னர், டுவிட்டர் இணையதளத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கோட்பாடுகளை மெஹடி மசூத் என்ற பெயர் கொண்ட ஒருவர் ஷமி விட்னஸ் என்ற பக்கத்தின் மூலம் வெளியிட்டு வருவதாகவும், அந்த பக்கத்தை தீவிரமாக கண்காணித்ததில், அந்த பக்கம் பெங்களூரைச் சேர்ந்த நபரால் இயக்கப்படுவதாகவும் செய்தி வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து கண்காணிப்பை அதிகப்படுத்திய காவல்துறையினர், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளராக சந்தேகிக்கப்படும் அந்த நபரை கைது செய்தனர். மெஹடி  மஸ்ரூர் பிஸ்வாஸ் (23) என்ற அந்த நபர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 2012-ம் ஆண்டு முதல் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். இவரது ஆண்டு வருமானம் 5.3 லட்சம். பகல் பொழுதில் வேலைக்குச் செல்லும் இவர், வீடு திரும்பியதும் இணையத்தில் ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆதரவான வேலைகளைச் செய்து வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

@shamiwitness என்ற டுவிட்டர் பக்கத்தை துவங்கி, அதன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கோட்பாடுகளை பதிவு செய்து வந்திருக்கிறார். தன்னை யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக சாதுர்யமாக தனது அடையாளத்தை ரகசியமாகவே வைத்திருந்திருக்கிறார். எனினும் சேனல் 4 தொலைக்காட்சி அந்த நபரை அம்பலப்படுத்திவிட்டது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மெஹடி மஸ்ரூர் பிஸ்வாஸ், மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.