Home கலை உலகம் ‘சூப்பர் ஸ்டார் 2014’ மூலம் மலேசியாவில் அறிமுகமாகிறது – ‘ஆக்மென்டட் ரியாலிட்டி’ தொழில்நுட்பம்

‘சூப்பர் ஸ்டார் 2014’ மூலம் மலேசியாவில் அறிமுகமாகிறது – ‘ஆக்மென்டட் ரியாலிட்டி’ தொழில்நுட்பம்

599
0
SHARE
Ad

Super Star logoகோலாலம்பூர், டிசம்பர் 24 – ‘ஆக்மென்டட் ரியாலிட்டி’ – நிச்சயம் உங்களை மகிழ்ச்சியில் குதூகலிக்க வைக்கப்போகும் ஓர் புதிய தொழில்நுட்பம்.

பத்திரிகைகளில் வெளிவரும் ஒரு வீடு விற்பனை விளம்பரத்தைப் பார்க்கிறீர்கள். வெறும் அச்சுக் காகிதமாக இருக்கும் அந்த விளம்பரத்தில் வழியே வீட்டின் உட்புறம் வரை சென்று முப்பரிமாணத்தில் (3டி) பார்க்கும் வசதி இருந்தால் மகிழ்ச்சியடைவீர்கள் தானே!

ஆம்.. அப்படி ஒரு மாயம் இந்த ‘ஆக்மென்டட் ரியாலிட்டி’ மூலம் சாத்தியமாகிவுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் பலவகையான பயன்பாடுகள் குறித்து மற்றொரு கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

#TamilSchoolmychoice

தற்போது இந்த ‘ஆக்மென்டட் ரியாலிட்டி’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மலேசியாவில் முதன் முறையாக “சூப்பர் ஸ்டார் 2014” நிகழ்ச்சியின் விளம்பரங்களை செய்து வருகின்றது அஸ்ட்ரோ நிறுவனம்.

“இன்றைய இளைஞர்கள் இது போன்ற புதுமைகளை தான் சார் அதிகம் விரும்புறாங்க. அவர்களை மகிழ்ச்சி படுத்தத்தான் இது போன்ற பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்றோம்” என்கிறார் அஸ்ட்ரோ தமிழ்ப் பிரிவின் நிர்வாகி டாக்டர் ராஜாமணி செல்லமுத்து.

இந்த ‘ஆக்மென்டட் ரியாலிட்டி’ தொழில்நுட்பத்திற்கு தமிழில் என்ன பெயரிடலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என நேற்று நடைபெற்ற சந்திப்பில் செய்தியாளர்களிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்த ராஜாமணி, “புலப்படும் மெய்மை” என்று தான் அதற்கு பெயரிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அதாவது “மெய்மை” என்பது ஒரு நிஜ நிகழ்வு ஆங்கிலத்தில் அதற்கு ‘ரியாலிட்டி’ என்கிறார்கள். புலப்படுவது என்றால் கண்ணுக்குத் தெரிவது. “புலப்படும் மெய்மை” என்றால் ஒரு சிறிய புள்ளியில் இருந்து அந்த நிகழ்வு நமக்கு புலப்படுகின்றது என தான் இட்ட பெயருக்கான விளக்கத்தையும் ராஜாமணி தெரிவித்தார்.

எப்படி பயன்படுத்துவது?

Astro Murali
முகிலன் சிதம்பரம் செய்தியாளர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கின்றார்.

நீங்கள் ஆப்பிள் அல்லது அண்டிரோய்டு செல்பேசிகளைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால், ‘ப்ளே ஸ்டோர்’ அல்லது ‘ஆப்பிள் ஸ்டோரில்’ இருந்து இந்த செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

அதன் பின்னர், பதிவிறக்கம் செய்த செயலியின் பயன்பாட்டிற்குள் நுழைந்தால், செல்பேசியின் கேமராவை இயக்குவது போல் திரையின் தோற்றம் காணப்படும்.

பின்னர், கீழேயுள்ள ‘சூப்பர் ஸ்டார்’ சின்னத்தின் மீது செல்பேசியை கொண்டு மையமிட்டால்,  புதுமையான அதிசயத்தை நீங்கள் அனுபவிக்கலாம்.Untitled

இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து நேற்று அஸ்ட்ரோ நிறுவனத்தில் நடைபெற்ற “சூப்பர் ஸ்டார் 2014” நிகழ்ச்சியின் செய்தியாளர்கள் சந்திப்பில் அந்நிறுவனத்தின் நியூ மீடியா பிரிவின் உதவி துணைத் தலைவரான முகிலன் சிதம்பரம் செயல்முறை விளக்கம் அளித்தார்.

மலேசியாவில் முதன்முறையாக இதன் பயன்பாட்டை சூப்பர் ஸ்டார் 2014 நிகழ்ச்சியின் வழி அஸ்ட்ரோ  தனது நாளிதழ் விளம்பரங்களிலும் மற்றும் விளம்பர பலகைகளிலும் வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது.

சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடிகர் டி.ராஜேந்தர் விளம்பரப்படுத்தும் காணொளியை https://www.facebook.com/video.php v=1022099104482276&set=vb.364719510220242&type=3&theater எனும் அஸ்ட்ரோ உலகம் ‘பேஸ்புக்கில்’ காணலாம்.

மேலும் இது குறித்த செயல் விளக்கத்திற்கு http://youtu.be/Hb1O0GX9M0E  அகப்பக்கத்தை வலம்வரவும். சூப்பர் ஸ்டார் குறித்து இன்னும் பல சுவாரிசயமான செய்திகள், சிறம்பம்சங்கள், காணொளிகள், புகைப்படங்களை நேயர்கள் தெரிந்து கொள்ள மேலெ குறிப்பிட்ட செயலியை இன்றே உங்கள் செல்பேசியில் பதிவிறக்கம் செய்யும்படி அஸ்ட்ரோ நிறுவனம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உலகில் புதிய தொழில்நுட்பங்கள் என்னவெல்லாம் இருக்கின்றதோ, அதையெல்லாம் மலேசியாவில் அறிமுகம் செய்து, தங்களது நிகழ்ச்சிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டும் அஸ்ட்ரோ நிர்வாகத்தின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியவை.

செய்தி, படங்கள்- ஃபீனிக்ஸ்தாசன்