Home நாடு திடீர் வெள்ளம் -கோலாலம்பூரிலும் பாதிப்பு – மீண்டும் ஏற்படலாம்!

திடீர் வெள்ளம் -கோலாலம்பூரிலும் பாதிப்பு – மீண்டும் ஏற்படலாம்!

586
0
SHARE
Ad

Kuala-Lumpur-Sceneகோலாலம்பூர், டிசம்பர் 27 – வியாழக்கிழமை கிறிஸ்துமல் தினத்தன்று பெய்த கனமழை காரணமாக கோலாலம்பூரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அன்றிரவு ஜாலான் ஈப்போவில், ரக்யாட் வங்கி கிளை அமைந்துள்ள பகுதியில் 5 கார்கள் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.

எனினும் இதில் யாருக்கும் காயமேற்படவில்லை என்றும், இச்சம்பவம் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நிகழ்ந்ததாகவும் அத்துறையின் இயக்குநர் கிருடின் டிராமன் தெரிவித்தார்.

காலை 10.45 மணியளவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்ட அவர், உடனடியாக மீட்புக்குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

“சாலையின் நடுவே உள்ள தடுப்புகளின் உயரத்திற்கு வெள்ள நீர் பெருக்கெடுத்திருப்பதைக் கண்ட மீட்புக்குழுவினர் துரித கதியில் செயல்பட்டனர்,” என்றார் கிருடின் டிராமன்.

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வெள்ளநீர் வடியத் தொடங்கியதால், சுங்கை கோம்பாக், ஜாலான் செந்தூல் மானிஸ், ஜாலான் துன் ரசாக், கம்போங் புவா என பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது.

எனினும் அடுத்த சில நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதால் கோலாலம்பூரில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.