Home நாடு ஏர் ஆசியா விமான பாகங்கள் கண்டுபிடிப்பா? லியோவ் தியோங் லாய் மறுப்பு

ஏர் ஆசியா விமான பாகங்கள் கண்டுபிடிப்பா? லியோவ் தியோங் லாய் மறுப்பு

473
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 28 – காணாமல் போன ஏர் ஆசியா விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் கிழக்கு பெலித்துங் தீவுக் கரையோரம் விமான பாகங்கள் மிதப்பதாக சில இணையதளங்களில் செய்தி வெளியானது.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், உறுதிபடுத்தப்படாத தகவல்களை யாரும் செவிமெடுக்க வேண்டாம் – நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“தற்போதைய சூழ்நிலையில் மக்கள் அமைதி காக்க வேண்டும். அதுவே முக்கியம். காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக பல்வேறு யூகச் செய்திகள் வெளியாகலாம். ஆனால் அவை உண்மையல்ல. விமானத்தை இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம்,” என இன்று மாலை நடைபெற்ற பத்திரிக்கை சந்திப்பில் லியோவ் தியோங் கூறினார்.

Malaysia Transport Minister,Liow Tiong Lai (L) holds a press conference regarding  the missing Air Asia Indonesia aircraft,QZ8501 at  Low-Cost Carrier Terminal (LCCT) at Sepang on 28 Dicember 2014 . The airline confirmed that flight QZ8501 from Surubaya,Indonesia to Singapore  lost contact with air traffic control at 07.42 am local ltime this morning

இன்று மாலை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய்.

படம்: EPA