Home கலை உலகம் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது!

‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது!

592
0
SHARE
Ad

romeo juliyatசென்னை, டிசம்பர் 30 – ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரித்து வரும் படம்  ரோமியோ ஜூலியட். இதில் ஜெயம் ரவியும், ஹன்சிகா மோத்வானியும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். மற்றும் விடிவி கணேஷூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படம் பற்றி இயக்குனர் லஷ்மணிடம் கூறியதாவது; “இதுவொரு மகிழ்ச்சியா காதல் கதை. படம் பார்க்கிற ஒவ்வொருவரும் நிச்சயம் ரசிப்பார்கள்”.

“இந்தப் படத்திற்காக புரசைவாக்கம் அருகே பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டன. கலை இயக்குனர் மிலனின் கைவண்ணத்தில் ஒரு கோடி ரூபாய் பொருள் செலவில் அமைக்கப்பட்ட அந்த வீட்டில் படத்தில் இடம் பெறும் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன”.

#TamilSchoolmychoice

“விரைவில் அங்கே ஜெயம் ரவி – ஹன்சிகா பங்கேற்கும் குத்துப் பாட்டு ஒன்றும் படமாக்கப்படவுள்ளது என கூறினார்  இயக்குனர் லஷ்மணிடம் என்றார்.