Home உலகம் இனி இந்தியாவிற்கு புரியும் மொழியில் பேசுவோம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!

இனி இந்தியாவிற்கு புரியும் மொழியில் பேசுவோம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!

497
0
SHARE
Ad

இஸ்லாமாபாத், ஜனவரி 5 – புத்தாண்டு தொடக்கம் முதல், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு இராணுவ வீரர்களும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கி உள்ள நிலையில், எல்லை விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான், இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

A young Indian villager holds up a piece of a mortar shell allegedly fired from the Pakistani side of the disputed Kashmir, Bainglar village in the Samba sector, some 60 km from Jammu, the winter capital of Kashmir, India, 03 January 2015. According to reports, Pakistan claims India killed two of its soldiers 31 December 2014, which also left an Indian soldier dead, though renewed shelling broke out the evning 02 January leaving one child dead and another wounded on the Pakistani side after which fire was traded which on the Indian side has left one dead and seven wounded.
பாகிஸ்தான் எல்லையோர இந்தியக் கிராமத்தின் சிறுவன் ஒருவன் பாகிஸ்தான் தரப்பிலிருந்து சுடப்பட்ட துப்பாக்கி ரவை ஒன்றைக் காட்டுகின்றான்.

காஷ்மீரின் சம்பா, கதுவா மாவட்ட எல்லையோர கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், சியால்கோட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் இராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், “எல்லையில் அமைதியை ஏற்படுத்தவே பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில், கடந்த சில மாதங்களாக நாங்கள், இந்தியாவுடன் நல்லுறவை பேண பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம்.”

“ஆனால் எங்களது சமரச மொழி இந்தியாவிற்கு புரியவில்லை. அதனால், இனி அவர்களுக்கு புரியும் மொழியிலேயே நாங்கள் தொடர்பு கொள்ளப் போகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

கவாஜாவின் அறிக்கையில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் உறவு மிக மோசமான கட்டத்தை எட்டி உள்ளதாக கருதப்படுகின்றது.

 Indian villagers are evacuated on a Government bus after alleged shelling from the Pakistani side of the disputed Kashmir, Bainglar village in the Samba sector, some 60 km from Jammu, the winter capital of Kashmir, India, 03 January 2015. According to reports, Pakistan claims India killed two of its soldiers 31 December 2014, which also left an Indian soldier dead, though renewed shelling broke out the evning 02 January leaving one child dead and another wounded on the Pakistani side after which fire was traded which on the Indian side has left one dead and seven wounded.
காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் தொடுத்த தாக்குதலைத் தொடர்ந்து, கிராம மக்கள் அரசாங்க பஸ்களின் மூலம் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

படங்கள்:EPA