Home இந்தியா பிரவாசி மாநாடு: வெளிநாடுவாழ் இந்தியர்கள் தேசத்தின் மூலதனம் – மோடி

பிரவாசி மாநாடு: வெளிநாடுவாழ் இந்தியர்கள் தேசத்தின் மூலதனம் – மோடி

624
0
SHARE
Ad

modi1காந்திநகர், ஜனவரி 9 – வெளிநாடுவாழ் இந்தியர்கள், தேசத்தின் சிறந்த மூலதனம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்புகள் காத்திருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியதை நினைவு கூரும் வகையில் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் வெளிநாடுவாழ் இந்தியர் தினம் “பிரவாசி பாரதீய திவஸ்’ மாநாடாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுடன் மகாத்மா காந்தி நாடு திரும்பி 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி வெளிநாடுவாழ் இந்தியர் தினம், குஜராத் தலைநகர் காந்திநகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நரேந்திர மோடி பேசியதாவது:

#TamilSchoolmychoice

“நான் பிரதமராகப் பதவியேற்ற பிறகு 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துள்ளேன். அவர்களுடன் மனம் திறந்து பேசியுள்ளேன். பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளும் சரி, முன்னேறிய நாடுகளும் சரி இந்தியாவுடனான நட்பை மிகவும் எதிர்பார்க்கின்றன”.

“ஜூன் 21-ஆம் தேதியை அனைத்துலக “யோகா தின’மாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியத் தரப்பிலிருந்து ஐ.நா. சபையிடம் வலியுறுத்தப்பட்டது. ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளில் 177 நாடுகள் இந்தியாவின் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்தன”.

modi4_010815104320“100 நாள்களுக்குள்ளேயே இந்தியாவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதியை அனைத்துலக யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதிலிருந்தே இந்தியாவின் மீது பிற நாடுகள் வைத்துள்ள அன்பைப் புரிந்து கொள்ள முடியும்”.

“அதேபோல் வெளிநாடுவாழ் இந்தியர்களிடம், சம்பந்தப்பட்ட நாடுகள் அன்பு செலுத்துவது அவர்களுடயை வருவாயையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு அல்ல. நம் நாட்டின் கலாசார பாரம்பரியத்தையும், வாழ்க்கை முறையையும் எண்ணியே உலக நாடுகள் நமக்கு மதிப்பளிக்கின்றன”.

“மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்துக்கு தலைமையேற்று செயல்பட்ட போது, தெருவை சுத்தம் செய்தார். கதர் ஆடைகள் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தினார்.

அதுபோல, இந்தியாவின் மீதான உலக நாடுகளின் எதிர்பார்ப்பை, நம்பிக்கையின் துணையுடன் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது”.

“இந்தியாவின் புனித நதியான கங்கையைத் தூய்மையாக்கும் பணியில் வெளிநாடுவாழ் இந்தியர்களும் இணைந்து செயல்பட வேண்டும். கங்கை நதியைத் தூய்மையாக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்படுவது மட்டுமின்றி, 40 சதவீத இந்திய மக்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வழியேற்படும்”.

modi2_“நம் நாட்டுக்கு, வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பு அன்னியச் செலாவணிகளாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. சேவை நோக்குடன் எத்தகைய பங்களிப்பையும் அவர்கள் மேற்கொள்ளலாம்” என மோடி தெரிவித்தார்.

மகாத்மா காந்தி, தென் ஆப்பிரிக்காவிலிருந்து தாயகம் திரும்பியதன் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் சிறப்பு நாணயங்கள், அஞ்சல்தலைகளை பிரதமர் மோடி வெளிநாடுவாழ் இந்தியர் தின விழாவில் வெளியிட்டார்.

உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது, மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்டதன் நினைவாக காந்திநகரில் அமைக்கப்பட்டுள்ள “தண்டி குடில்’ அருங்காட்சியகத்தை பிரதமர் தொடக்கி வைத்தார்.

அருங்காட்சியகத்தினுள் 41 மீட்டர் உயரம் கொண்ட உப்பு மலை வடிவமைக்கப்பட்டு, அதில் காந்தியின் வாழ்க்கைச் சம்பவங்கள் சிலைகளாக செதுக்கப்பட்டுள்ளன.