Home நாடு மஇகா மறுதேர்தலுக்கு கூடுதல் அவகாசம் தர ஆர்ஓஎஸ் மறுப்பு – சரவணன் தகவல்

மஇகா மறுதேர்தலுக்கு கூடுதல் அவகாசம் தர ஆர்ஓஎஸ் மறுப்பு – சரவணன் தகவல்

571
0
SHARE
Ad

m.saravanan1-may7கோலாலம்பூர், ஜனவரி 21 – மஇகா மறுதேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் கேட்டு அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தாக்கல் செய்திருந்த மனுவை சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) நிராகரித்தது.

நேற்று ஆர்ஓஎஸ் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

கடந்த ஜனவரி 6-ம் தேதி  மஇகாவிற்கு ஆர்ஓஎஸ் அனுப்பிய கடிதத்தில், மஇகா மறுதேர்தல் நடத்த அதன் கிளைகளுக்கு  30 நாட்களும், மாநில பிரிவுகளுக்கு (division) 60 நாட்களும் மற்றும் மத்தியச் செயலவைக்கு 90 நாட்களும் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது நினைவு படுத்தப்பட்டிருப்பதாகவும், ஜனவரி 31 -ம் தேதிக்குள் மறுதேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதாகவும் சரவணன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“எந்த ஒரு மேல்முறையீட்டையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஆர்ஓஎஸ் உறுதியாகக் கூறிவிட்டது. கிளைகளுக்கு மறுதேர்தல் நடத்த இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அங்கு பிரச்சனைகளைத் தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”

“மறுதேர்தலுக்கு 14 நாட்களுக்கு முன்னதாக கிளைகளுக்கு அறிக்கை அனுப்பி இருக்க வேண்டும். எனவே அந்த இரண்டு கிளைகளும் மறுதேர்தல் நடத்தத் தவறியதால் தானாவே கலைந்து விட்டது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். இனி இரண்டாவது வாய்ப்பை ஆர்ஓஎஸ் வழங்குமா என்பது தெரியாது” என்று சரவணன் கூறியுள்ளார்.

கட்சியின் 600,000 உறுப்பினர்களும் பிரச்சனையில் தவிக்கும் போது, அதைப் பற்றி எந்த ஒரு அக்கறையும் காட்டாத கட்சித் தலைவர் பழனிவேலின் அணுகுமுறையைக் கண்டு தான் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, கடந்த 2009 ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையுள்ள மஇகா பேராளர்களை வைத்து மறுதேர்தலை நடத்த அனுமதி கோரி ஆர்ஓஎஸ்-க்கு சரவணன் கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆர்ஓஎஸ் இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் கட்சியின் மாநிலப் பிரிவுகளை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வெளிநாடு செல்வதற்கு முன்பாக, மஇகா தொகுதிகளின் பொறுப்பாளர்களை சந்தித்த பழனிவேல், இப்போது மறுதேர்தல் நடத்தினால் அதற்கு அடுத்த ஆண்டே மீண்டும் மஇகா தேர்தல் நடத்த வேண்டும் என்ற காரணத்தினால், கட்சியின் எல்லாப் பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்த  நடத்த சங்கப் பதிவதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.