Home இந்தியா ஒபாமா இந்திய வருகை நிகழ்வுகள் (தொகுப்பு 2) – படக் காட்சிகளுடன்!

ஒபாமா இந்திய வருகை நிகழ்வுகள் (தொகுப்பு 2) – படக் காட்சிகளுடன்!

592
0
SHARE
Ad

புதுடில்லி, ஜனவரி 26 – 3  நாள் வருகை மேற்கொண்டு டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தொடர்ந்து நேற்று பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர் அங்கு தனது வருகையின் நினைவாக மரம் ஒன்றையும் ஒபாமா நட்டு வைத்தார்.

#TamilSchoolmychoice

காந்தி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த ஒபாமாவுக்கு ஒரு சிறிய காந்தி சிலை, ஒரு ராட்டை, ராட்டையில் நெய்யப்பட்ட கைத்தறி (காதி) துணி மற்றும் காந்தியின் சுயசரிதை உள்ளிட்ட 3 நூல்களும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

ஒபாமா ராஜ்காட்டுக்கு வருவது இது 2வது முறையாகும். ஏற்கனவே 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் இந்தியா வந்தபோதும் காந்தி நினைவிடத்திற்கு வந்திருந்தார். பொதுவாக இந்தியா வரும் உலகத் தலைவர்கள் அனைவரும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவது பாரம்பரியமாக பின்பற்றப்படும் மரபாக இருந்து வருகின்றது.

???????????????????????????????

அதிபர் மாளிகையில் வழங்கப்பட்ட மதிய உணவுக்குப் பின்னர் ஹைதராபாத் ஹவுஸ் என்ற இடத்தில் நரேந்திர மோடிக்கும், ஒபாமாவுக்கும் இடையில் நேரடி பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தது.

அப்போது ஹைதராபாத் ஹவுஸ் வந்த ஒபாமாவை வரவேற்று அழைத்துச் சென்றார் மோடி.

பேச்சுவார்த்தையைத் தொடக்குவதற்கு முன்பாக மோடி ஒபாமாவை ஹைதராபாத் ஹவுசில் உள்ள திறந்த வெளி பூந்தோட்டத்திற்கு அழைத்துச் சென்று தேநீர் வழங்கி உபசரித்தார்.

தானே சொந்தமாக தேநீர் தயாரித்து அதனை ஒபாமாவுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளமைக் காலத்தில் குஜராத்தில் தேநீர்க் கடை நடத்தி அங்கு பொதுமக்களுக்கு தேநீர் விநியோகித்த நரேந்திர மோடி, கால ஓட்டத்தில் இந்தியப் பிரதமராகி, நேற்று தன் கைப்பட தயாரித்த தேநீரை அமெரிக்க அதிபர் ஒருவருக்கு வழங்கி உபசரித்தது விதியின் விளையாட்டன்றி வேறென்ன!

???????????????????????????????

ஹைதராபாத் ஹவுசில் ஒபாமாவுடன் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் காட்சி.

Obama Modi Joint Press Conf

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஒபாமாவும், மோடியும் இணைந்து கூட்டாக பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர்.

அவர்களின் பேச்சுவார்த்தையின் பயனாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முக்கிய அம்சங்களுடன் கூடிய அணுசக்தி கூட்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

???????????????????????????????

ஒபாமாவுடனான தனது சந்திப்பின்போது 1946ஆம் ஆண்டில்  தேர்தல் நடத்தப்பட்டு அமைக்கப்பட்ட இந்தியாவின் மக்கள் பிரதிநிதிகள் மன்றத்திற்கு அப்போதைய அமெரிக்க அரசாங்கம் அனுப்பிய தந்தியை ஒபாமாவிடம் நினைவுப் பரிசாக வழங்கினார்.

படங்கள்: EPA