Home உலகம் ரஷ்யா குரில் தீவில் கடுமையான பூகம்பம் – ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு

ரஷ்யா குரில் தீவில் கடுமையான பூகம்பம் – ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு

496
0
SHARE
Ad

russia-sliderமாஸ்கோ, மார்ச். 1-  ரஷ்யாவின் கிழக்குப்பகுதி காம்சட்கா தீபகற்பத்தில், ஜப்பான் அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது குரில் தீவு.

இங்கு நேற்று இரவு 6.9 ரிக்டர் அளவிலான கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இங்கு பூமிக்கடியில், 53 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த பூகம்பத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

19,000 ஆயிரம் மக்கள் வசிக்கும் இங்கு, இந்த பூகம்பத்தின் பாதிப்பு குறித்த எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி இப்பகுதி தீவுகளை, ரிக்டர் அளவில் 5.5 அளவிலான பூகம்பம் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

காம்சட்கா – குரில் பகுதி உலகில் அதிகம் பூகம்பம் நடக்கும் பகுதியாக கருதப்படுகிறது.