Home உலகம் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழியுங்கள் – பாகிஸ்தானுக்கு ஐநா வலியுறுத்தல்!

தீவிரவாதத்தை முற்றிலும் ஒழியுங்கள் – பாகிஸ்தானுக்கு ஐநா வலியுறுத்தல்!

522
0
SHARE
Ad

un1இஸ்லாமாபாத், பிப்ரவரி 2 – பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஷியா மசூதியில், கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். 60-க்கும் மேற்பட்டோர் பலியான இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா.

பொதுச் செயலாளர் பான் கீ மூன், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் சார்பில் அவரது செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் மசூதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. அனைத்து மதத்தினரின் பாதுகாப்பும், இறையாண்மையும் காக்கப்பட வேண்டும்”.

#TamilSchoolmychoice

“தங்கள் நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு உறுதிபடுத்த வேண்டும். பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் நம்பிக்கை அளிப்பனவாக உள்ளன”.

“எனினும் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க அந்நாட்டு அரசு தங்கள் நடவடிக்கைகளை மேலும் முடுக்கிவிட வேண்டும் என ஐ.நா. விரும்புகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.