Home உலகம் சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்

சிங்கப்பூரில் இந்தியர் உள்பட 70,000 வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம்

790
0
SHARE
Ad

singapore-flag-sliderசிங்கப்பூர், மார்ச்.1- சிங்கப்பூர் அரசு கொண்டுவந்துள்ள புதிய கொள்கை காரணமாக இந்தியர்கள் உள்ளிட்ட அனுபவம் குறைவான 70,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் பணியாளர் நலத் துறை அமைச்சகம் கூறுகையில், “உள்நாட்டினருக்கு சம வாய்ப்பை வழங்கும் நோக்கத்திலும், “எஸ் பாஸ்’ உரிமத்தின் அடிப்படையில் திறமையான வெளிநாட்டினரை பணியில் அமர்த்த வேண்டும் என்ற நோக்கத்திலும் அதிக கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

மேலாளர் நிலையில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு எஸ் பாஸ் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த உரிமம் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி இந்த உரிமத்தின் கீழ் 1.42 லட்சம் பேர் பணியாற்றினர். இவர்களின் உரிமம் காலாவதி ஆக உள்ள நிலையில், புதிய கொள்கையின்படி, அனுபவம் குறைவான 70,000 பேரின் உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது என எனத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

புதிய கொள்கையின்படி வரும் ஜூலை மாதம் முதல் அனுபவமுள்ள, மேலாளர் நிலையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது மாத ஊதியமாக 2,200 சிங்கப்பூர் டாலருக்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் மட்டுமே தொடர்ந்து அங்கேயே பணிபுரிய முடியும். மற்றவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது.