Home இந்தியா மீனவர்கள் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு – மோடி-சிறிசேனா சந்திப்பில் முடிவு!

மீனவர்கள் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு – மோடி-சிறிசேனா சந்திப்பில் முடிவு!

453
0
SHARE
Ad

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????புதுடெல்லி, பிப்ரவரி 17 – இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது தமிழக  மீனவர் பிரச்சனைக்கு ஆக்கபூர்வமான மற்றும் மனிதாபிமான முறையில் நிரந்த தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.

இலங்கையின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா, தனது முதல் வெளிநாட்டு அரசு முறைப்  பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவருக்கு அதிபர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிபர் சிறிசேனா,  பிரதமர் நரேந்திர மோடியை ஐதராபாத் இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் இலங்கை குழுவினரை சந்தித்தார்.

#TamilSchoolmychoice

இந்திய-இலங்கை குழுவினர் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் அணுசக்தி துறையில் இணைந்து செயல்படுவது, பொருளாதார மற்றும் ராணுவ  உறவுகளை மேம்படுத்துவது, பண்பாடு, வேளாண்மை போன்ற துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்பின் இதற்கான  ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் இலங்கை அர சியலமைப்பு சட்டத்தின் 13-வது திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியது.

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????இந்த சந்திப்புக்குப்பின் அதிபர் சிறிசேனாவுடன் கூட்டாக அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியதாவது; “இலங்கை அதிபர் சிறிசேனவை  இந்தியாவுக்கு வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி. அவரது வெற்றிக்கு இந்திய மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”.

“தேர்தலில் இலங்கை  மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, அவர்களின் ஒட்டுமொத்த குரலை வெளிகாட்டுகிறது. ஒற்றுமை நிலவ வேண்டும், நாடு வளம் பெற வேண்டும் என்பதை இலங்கை  தேர்தல் முடிவு காட்டுகிறது”.

“அதிபர் சிறிசேனாவும், நானும் இரு தரப்பு உறவுகள் மற்றும் உலக விஷயங்கள் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனை நடத்தினோம்.  இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரராக நாம் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்”.

“இந்தியா-இலங்கை இடையே வான்வழி மற்றும் கடல் வழி போக்குவரத்தை நாங்கள் மேலும் முன்னேற்றுவோம். அணுசக்தி துறையில் இருதரப்பு இடையே  ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், இரு நாடுகள் இடையேயான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது”.

“இதுபோன்ற ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திடுவது இதுவே  முதல்முறை. என்னை இலங்கை வருமாறு அதிபர் சிறிசேனா அழைத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அழகான  இலங்கைக்கு அடுத்த மாதம் செல்ல ஆர்வமாக உள்ளேன்” என மோடி கூறினார்.

பிரதமர் மோடி பேசுகையில், ‘‘மீனவர் பிரச்சனைக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். இது இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும்  பாதிக்கிறது. இப்பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வமான, மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டும்.

இது தொடர்பாக இருநாட்டு மீனவர்கள் சங்கங்களும் மீண்டும்  சந்தித்து பேசுவதை ஊக்குவிப்போம். இப்பிரச்சனைக்கு மீனவர்கள்தான் தீர்வு காண வேண்டும். அதை இருநாட்டு அரசுகளும் பரிசீலனை செய்து அமல்படுத்தும்’’  என்றார்.