Home இந்தியா பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்

502
0
SHARE
Ad

6சென்னை, மார்ச் 02-  “பெட்ரோலிய பொருட்களின் விலையை, அடிக்கடி உயர்த்துவது, நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும்’ என, முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை

மத்திய அரசு, ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் மூலம், மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில், நள்ளிரவு (1ம் தேதி) முதல் பெட்ரோல் விலையை, லிட்டருக்கு, 1 ரூபாய் 40 பைசா என்ற அளவிற்கு உயர்த்தி உள்ளது. இது, “எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?’ என்ற பழமொழியை நினைவுப்படுத்துகிறது.

#TamilSchoolmychoice

பெட்ரோல் விலையை, லிட்டருக்கு, ரூ. 1.40, டீசல் விலையை, லிட்டருக்கு, 45 பைசா என்ற அளவிற்கு உயர்த்தி, இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை. இந்நிலையில், மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்திருப்பது, மிகுந்த வேதனை மற்றும் கடும் கண்டனத்துக்குரியது. இந்த விலை உயர்வு, வாகன கட்டணங்கள் மற்றும் அனைத்து பொருட்களின் விலையும் உயர வழிவகுக்கும். இந்த விலை உயர்வு, மக்களை மீண்டும் நெருக்கடியான நிலைக்கு ஆளாக்கும். பெட்ரோலிய பொருட்களின் விலையை, அடிக்கடி உயர்த்துவது, ஏழை, எளிய மக்களை பாதிக்கும்.

மத்திய அரசின், இந்த தவறான பொருளாதார கொள்கை, நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்குமே தவிர, மேம்படுத்த வழிவகுக்காது. பெட்ரோலிய பொருட்களின் விலையை மாற்றியமைப்பது, பொருளாதார நிலைத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும். இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயக்கொள்கையில், உடனே மாற்றம் கொண்டு வர வேண்டும்.

ஏழை, எளிய மக்கள் நலன் கருதி, பெட்ரோல் விலை உயர்வை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மேலும், எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற முடிவையையும், மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். “மக்களை கொடுமைப்படுத்துவது வாடிக்கை’ என்ற முறையில், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, மக்களை கொடுமைப்படுத்தினால், கொடுமை தாங்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர், மத்திய அரசை அழிக்கும் ஆயுதமாகி விடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.