Home உலகம் மோடியின் வருகை ரத்தானது கவலை அளிக்கிறது – மாலத்தீவு!

மோடியின் வருகை ரத்தானது கவலை அளிக்கிறது – மாலத்தீவு!

508
0
SHARE
Ad

modiபுதுடெல்லி, மார்ச் 18 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணத் திட்டத்தில் மாலத்தீவிற்கான வருகை ரத்து செய்யப்பட்டது எங்களை காயப்படுத்தி உள்ளது என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இந்திய பெருங்கடல் நாடுகளான செஷல்ஸ், மொரீஷியஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகளின் உறவை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றுப்பயணத்தில், மாலதீவிற்கும் அவர் பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத்தை கைது செய்த போது மேற்கொண்ட அடக்குமுறை உள்ளிட்ட காரணங்களால் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து மாலத்தீவின் துணை வெளியுறவு துறை அமைச்சர் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“இந்தியாவின் கவலையை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. தங்கள் அருகாமையில் உள்ள நாடுகளில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் கவலை அடைவது இயற்கையானதுதான்.”

“இந்தியப் பிரதமர் மோடியின் மாலத்தீவு சுற்றுப்பயணத்திற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் விரிவான ஆலோசனை நடத்தினோம். ஆனால், மோடியின் சுற்றுப்பயணத்திற்கான உகந்த சூழல் இல்லை என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. அது எங்களை மிகவும் காயப்படுத்தி உள்ளது”

“முகமது நசீத் கைது தொடர்பாக, எந்த நாடும் இதுவரை தலையிடவில்லை. இது உள்நாட்டு நீதித்துறை செயல்பாடு. எங்கள் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் இந்தியா மதிக்க வேண்டும். நட்புறவின் அடிப்படையில் வேண்டுமானால் நம் கவலைகளை பேச்சுவார்த்தையின் மூலம் விவாதிக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.