Home உலகம் இங்கிலாந்தில் 530 வருடங்களுக்கு முன் இறந்த மன்னரின் உடல் அடக்கம்!

இங்கிலாந்தில் 530 வருடங்களுக்கு முன் இறந்த மன்னரின் உடல் அடக்கம்!

431
0
SHARE
Ad

TamilDailyNews_5193096399308லண்டன, மார்ச் 24 – இங்கிலாந்தில் 530 வருடங்களுக்கு முன் இறந்த மூன்றாம் ரிச்சர்ட் என்ற மன்னரின் உடல் நேற்று தான் முறையாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பிரான்சில் இருந்து இங்கிலாந்து வந்து குடியேறிய பிளான்டஜெனட் என்ற ஒரு பிரிவினர் அங்கு லீசெஸ்டர் என்ற பகுதியை 1154 முதல் 1485 வரை ஆண்டு வந்திருக்கிறார்கள்.

அந்த வம்சத்தின் கடைசி மன்னராக இருந்த மூன்றாம் ரிச்சர்ட், 1485-ல் நடந்த ஒரு போரில் இறந்துவி்ட்டார். அவரது உடலை அப்போது உள்ளவர்கள், ஒரு சவப்பெட்டிக்கூள் வைத்திருக்காமல், மரியாதையும் செய்யாமல் அப்படியே எங்கோ புதைத்திருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

2012-ல் ஒரு புதைபொருள் ஆராட்சியாளர், தற்செயலாக இவரது எலும்புகளை, கார்பார்க்கிங் ஒன்றின் அடியில் கண்டுபிடித்து எடுத்து லீசெஸ்டன் பல்கலைக்கழகத்தில் கொடுத்து இது மூன்றாம் ரிச்சர்ட் இன் எலும்புகள் தானா என்று கண்டுபிடிக்க வைத்திருக்கிறார்.

பல ரசாயன பரிசோதனைகளுக்கு பின் இது அவரது உடல் பாகங்கள்தான் என்று உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் பாகங்கள் ஒரு சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு, ஒரு மன்னருக்கு உள்ள மரியாதையுடன் நேற்று லீசெஸ்டரில் அடக்கம் செய்யப்பட்டது.