Home நாடு பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பில் லகாட் டத்து

பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பில் லகாட் டத்து

536
0
SHARE
Ad

lahad-datu-standoff-600x356சபா, மார்ச் 5- சபா, லகாட் டத்துவில் பதுங்கி இருக்கும் ஊடுருவல்காரர்களைத் தேடும் பணி மேலும் தீவிரமடைந்துள்ளது என்று காவல்துறை பொது கண்காணிப்பாளர் இஸ்மாயில் ஓமர் தெரிவித்தார்.

இன்று மாலை லகாட் டத்து, சகாபாட் பெல்டாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய இஸ்மாயில், மலேசியப் படையினர் லாகாட் டத்துவைச் சுற்றி 4 சதுர மைல் பரப்பளவிற்கு தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருவதாகவும், நிறைய எதிரிகள் அங்கு பதுங்கி இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.

இதுவரை ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இப்போது உறுதியாகச் சொல்லமுடியாது என்றும்,மேலும் சேதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஊடுருவல்காரர்களின் உடல்கள் சிதைக்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை முற்றிலும் மறுத்த அவர்,

“உண்மையான நிலைமை என்னவென்று தெரியாமல் எப்படி இது போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள்?” என்று கேட்டார்.

மேலும், “மலேசியப் படையினரின் பாதுகாப்பிற்கு உட்பட்ட பகுதியில் இருந்து எதிரிகள் தப்பியிருக்க முடியுமா ?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,

“தப்பி இருக்க முடியாது என்றே நினைக்கிறோம்.ஆனாலும் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்துவருகிறது” என்று பதிலளித்தார்.

இன்று காலை முதல் அங்கு வான் வழித் தாக்குதல், தரை வழித் தாக்குதல் என்று ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மலேசியப் படையினர் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.