Home அவசியம் படிக்க வேண்டியவை குரங்கிற்கு ‘சார்லோட்’ என பெயர் – ஜப்பான் வனவிலங்கு பூங்கா மன்னிப்பு கோரியது!

குரங்கிற்கு ‘சார்லோட்’ என பெயர் – ஜப்பான் வனவிலங்கு பூங்கா மன்னிப்பு கோரியது!

596
0
SHARE
Ad

டோக்கியோ, மே 7 – ஜப்பானில் உள்ள தகாசாகியாமா இயற்கை வனவிலங்குகள் பூங்காவில் புதிதாகப் பிறந்த குரங்கு ஒன்றிற்கு சார்லோட் என்று பெயர் வைத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

காரணம் நேற்று முன்தினம் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம், கேத்தே மிடில்டன் தம்பதியருக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையின் பெயர் சார்லோட் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், அதே பெயரை குரங்கிற்கும் சூட்டி கடுமையான விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளது பூங்கா நிர்வாகம்.

store070515e

#TamilSchoolmychoice

இந்நிலையில், தங்களின் இந்த செயலுக்கு பூங்கா நிர்வாகம் மன்னிப்பு கோரி தங்களது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மக்காயூ குரங்குகளுக்கு பெயர் பெற்ற அந்த பூங்காவில், ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் முதல் குரங்கிற்கு பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் பெயரை சூட்டுவது வழக்கம்.

இந்நிலையில், பொதுமக்கள் தேர்வுக்காக அறிவிக்கப்பட்டிருந்த 59 பெயர்களில், சார்லோட் என்ற பெயருக்கு 853 பொதுமக்கள் வாக்களித்துள்ளதாக ஜப்பான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

குரங்கிற்கு ‘சார்லோட்’ என பெயர் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், வேறு பெயரை மாற்றுவது குறித்து பூங்கா நிர்வாகம் யோசித்து வருகின்றது.