Home வாழ் நலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்!

617
0
SHARE
Ad

indian-gooseberries-621மே 18 – நெல்லிக்காய் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். 100 கிராம் நெல்லிக்காயில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்துள்ளன. இதனை பச்சையாகவோ அல்லது பொடியாகவே எடுத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நெல்லிக்காய் சாற்றில் சிறிது தேன் அல்லது தண்ணீருடன் கலந்து நாள் ஒன்றுக்கு 3-4 முறை எடுத்துக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

சிறிய காயில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. ஒரு நெல்லிக்காய் எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் வெகுவாய் முன்னேற்றம் பெறும்.

#TamilSchoolmychoice

அடிக்கடி வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் சிறிது நெல்லிக்காய் சாற்றில் சிறிதளவு தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க நல்ல தீர்வு கிடைக்கும்.

நெல்லிக்காய் மலச்சிக்கலைத் தீர்க்கும். மூட்டுவலி, வீக்கம் ஆகியவற்றை நன்கு கட்டுப்படுத்தும் திறன் நெல்லிக்காய்க்கு உண்டு.

மன உளைச்சலால் தூக்கமின்றி அவதிப்படுபவர்கள் தினமும் நெல்லிக்காய் சாறு அருந்த தூக்கம் நன்கு வரும். மருத்துகளும், மதுவும் உடலில் அதிக நச்சுப் பொருட்களை குவிக்கும். நெல்லிக்காய் இந்த நச்சுப் பொருட்களை நன்கு நீக்கும்.

amla-juiceஇந்த நெல்லிக்காய் சாறு கல்லீரல், பித்தப்பை இவைகளை நன்று இயக்க வல்லது. கண் எரிச்சல், கண் சிகப்பு போன்றவை நெல்லிக்காய் சாறு அருந்த தீர்வு பெறும்.

தினமும் நெல்லிக்காய் சாறு அருந்த புற்றுநோய் போன்ற பெரிய நோய்களின் பாதிப்பு கூட வராமல் காக்கும். நெஞ்செறிச்சல் உடையவர்கள் நெல்லிக்காய் சாறு மூலம் ஆரோக்கியம் பெறலாம்.

உடலின் உள் உறுப்புகளின் செயல்பாட்டுத்திறனை நெல்லிக்காய் கூட்டுவதன் மூலம் பருத்த உடல் இளைக்கும். நுரையீரலும், நரம்பு மண்டலமும் வலுப்பெறுகின்றது.  நோய் எதிர்ப்பு சக்தி கூடும். ரத்தம் சுத்திகரிக்கப்படும்.