Home நாடு மாணவர் கவீந்திரனின் மேற்படிப்பிற்கு பழனிவேல் 2 லட்சம் நிதியுதவி!

மாணவர் கவீந்திரனின் மேற்படிப்பிற்கு பழனிவேல் 2 லட்சம் நிதியுதவி!

512
0
SHARE
Ad

10686889_954434414579025_1479356264146784943_nகோலாலம்பூர், ஜூன் 2 – எஸ்டிபிஎம் தேர்வில் 4ஏ பெற்று சாதனை படைத்த மாணவர் பி.கவீந்திரனின் மேற்படிப்பிற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இன்று 2 லட்சம் ரிங்கிட் (200,000) நிதியுதவி அளித்தார்.

11393125_954434457912354_4159295746049299372_n

அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் உளவியல் (psychology) துறையில் மேற்படித்தைத் தொடரவுள்ள அவருக்கு, தனது வாழ்த்துகளையும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

20 வயதான கவீந்திரன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவராக இருந்தாலும், சாதனை படைக்க பார்வை குறைபாடு ஒரு தடையே இல்லை என நிரூபித்தவர்.

தகவல், படங்கள்: டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பேஸ்புக்.