Home உலகம் சூடான் அதிபரைக் கைது செய்யுமாறு தென் ஆப்பிரிக்காவுக்கு அனைத்துலக நீதிமன்றம் கோரிக்கை!

சூடான் அதிபரைக் கைது செய்யுமாறு தென் ஆப்பிரிக்காவுக்கு அனைத்துலக நீதிமன்றம் கோரிக்கை!

471
0
SHARE
Ad

t1larg.sudan.bashir.afp.giஜோகன்னஸ்பர்க், ஜூன் 15 – ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில் கலந்து கொள்ள ஜோகன்னஸ்பர்க் நகருக்கு வந்துள்ள சூடான் அதிபர் ஒமர் அல்-பஷிரைக் கைது செய்யுமாறு தென் ஆப்பிரிக்க அரசை அனைத்துலக நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2003-ஆம் ஆண்டு சூடானில் நடைபெற்ற போரில், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும், போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து அப்போது அந்நாட்டு அதிபராக இருந்த பஷிர் மீது அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பஷிரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து அனைத்துலக நீதிமன்ற தலைவர் அறிக்கை ஒன்றில் கூறுகையில், “நீதிமன்றத்தை வலிமையாக்கும் விதத்தில் எப்போதுமே தென் ஆப்பிரிக்கா செயல்பட்டு வருகிறது. அதேபோல் இம்முறையும் அந்நாடு செயல்படும் என்று எதிர்பார்ப்பதாகவும்” கூறியுள்ளார்.