Home உலகம் ஓரினத் திருமண விவகாரம்: ஒபாமா, ஹிலாரி கருத்துக்கு பாபி ஜிண்டால் கண்டனம்!

ஓரினத் திருமண விவகாரம்: ஒபாமா, ஹிலாரி கருத்துக்கு பாபி ஜிண்டால் கண்டனம்!

537
0
SHARE
Ad

ombaவாஷிங்டன், ஜூன் 30 – ஓரினத் திருமணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள ஹிலாரி கிளிண்டன், ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்கு, அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள இந்திய வம்சாவளி பாபி ஜிண்டால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் வகையில், ஓரினத் திருமணத்துக்கு அங்கீகாரம் அளித்து சமீபத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதை வரவேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் கருத்து தெரிவித்தனர். இதைக் கண்டித்து பாபி ஜிண்டால் கூறியதாவது:

#TamilSchoolmychoice

“கருத்துக் கணிப்புகளின் அடிப்படையிலும், தேர்தலை முன்னிட்டும் ஒபாமா மற்றும் ஹிலாரி ஓரின திருமணத்தை வரவேற்பதாக கருத்து கூறியுள்ளனர். என்னுடைய கருத்து, திருமணம் என்பது கிறிஸ்தவ மதத்தின் கோட்பாடுகள் அடிப்படையில் இருக்க வேண்டும்”.

“ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில்தான் திருமணம் நடக்க வேண்டும். கடவுளின் படைப்பில் அனைவரும் சமம். ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதுதான் உண்மையான திருமணம்”.

“இதற்கு எதிராக சிலர் இருக்கலாம். ஆனால் அவர்களையும் மதிக்கிறோம். அவர்களுடைய உணர்வுகளை மதிக்கிறோம். அவர்கள் மீதும் அன்பு செலுத்துகிறோம். பாகுபாடு எதுவும் இல்லாமல் மத உரிமைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்”.

“திருமணம் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தி முடிவு செய்யக் கூடாது. இயற்கைக்கு எதிராக, மதக் கோட்பாடுகளுக்கு எதிராகவும் திருமணம் என்பது இருக்கக் கூடாது. இங்கு நாம் இந்திய-அமெரிக்கர்கள், ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் என்று பிரித்து பார்க்கக் கூடாது”.

“நாம் அனைவரும் அமெரிக்கர்கள். ஒருவருடைய நிறத்தை வைத்து பாகுபாடு பார்ப்பது கொடுமையானது. அதுபோலதான் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடப்பதுதான் திருமணம். இதில் மதத்தை சேர்க்கக் கூடாது”.

“அதுபோல திருமணத்துக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவின் மூலம் திருமணத்தின் உண்மையான அர்த்தத்தை மாற்றிவிடக் கூடாது” என்றார் பாபி ஜிண்டால்.