Home One Line P2 ‘கள்வனைக் கண்டுப்பிடி’ – புதிய உள்ளூர் தமிழ் தொடர் – ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் அறிமுகம்

‘கள்வனைக் கண்டுப்பிடி’ – புதிய உள்ளூர் தமிழ் தொடர் – ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் அறிமுகம்

717
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜூலை 1 முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231) வாயிலாக தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் முதல் ஒளிபரப்பு காண்கிறது ‘கள்வனைக் கண்டுப்பிடி’ என்ற புத்தம் புதிய தொடர். கார்த்திக் ஷாமலன் கைவண்ணத்தில் உருவாகியிருக்கிறது இந்த உள்ளூர் அமானுஷ்ய தொடர். அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் கண்டு மகிழும் வண்ணம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசைகளுக்கான வணிகம் (விண்மீன்) மற்றும் மின்னியல் உதவித் துணைத் தலைவர் குப்புசாமி சந்திரகாஸ் கூறுகையில், “உள்ளூர் உள்ளடக்கத்தில் நாங்கள் தொடர்ந்து முதன்மை வகிப்பதால், எங்களின் முதன்மை நோக்கமே வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான தரமான உள்ளூர் உள்ளடக்கங்களை வழங்குதல் ஆகும். ‘கள்வனைக் கண்டுப்பிடி’ தொடங்கி ஜூலை முதல் ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் பல்வேறு புதிய உள்ளூர் தமிழ் தொடர்களை ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) கண்டு மகிழலாம்” எனத் தெரிவித்தார்.

ஆஸ்ட்ரோவின் குப்புசாமி சந்திரகாஸ் – இயக்குநர் கார்த்திக் ஷாமலன் – தயாரிப்பாளர் எலினா தோமஸ்

“திறன்மிக்க உள்ளூர் களைஞர்களுக்கு அவர்களின் உயர்தரத் தொடர்கள் மற்றும் திரைப்படங்களைத் திரையிட அரிய வாய்ப்புகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் எங்களின் வாடிக்கையாளர்கள் ஒளியேறவிருக்கும் அற்புதமான புத்தம் புதிய நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்வார்கள் என நாங்கள் பெரிதும் நம்புகிறோம்” என்றும் குப்புசாமி சந்திரகாஸ் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

‘கள்வனைக் கண்டுப்பிடி’ தொடரின் இயக்குனர் கார்த்திக் ஷாமலன் கூறுகையில், “உள்ளூர் தமிழ் அமானுஷ்ய தொடரான இதனை முதல் ஒளிப்பரப்பு செய்வதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். மலேசியர்கள் அனைவரும் இத்தொடரைக் கண்டு களிப்பர் என்று நாங்கள் நம்புகிறோம். மலேசியர்கள் உள்ளூர் திரைப்படத் துறைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதோடு, ஆஸ்ட்ரோ வழங்கும் அறிய வாய்ப்புகளைப் பாராட்டுவார்கள் எனவும் பெரிதும் நம்புகிறோம்.”

ஆஸ்ட்ரோ வணிகப் பிரிவு உதவித் தலைவர் மார்க் லூர்ட்ஸ்…

லிங்கேஸ்வரன் மணியம், பாஷினி சிவகுமார், மகேன் விகடகவி, கே.எஸ். மணியம், காந்தீபன்@பென் ஜி, ராஜ் கணேஷ், ரவின் ராவ், சந்திரன், சங்கபாலன், ஆர். மோகன ராஜ், கெ.பி.தி (பி.ஏ) ராமசுந்தரன், சுபாஷினி அசோகன், ரேன்னி மார்ட்டின் மற்றும் சாய் கோகிலா ஆகியோர் நடித்துள்ள 26 அத்தியாயங்கள் கொண்ட இத்தொடரை வாடிக்கையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

தனது காதலியின் கொலைக்குப் பிறகு வாழ்க்கையில் ஆர்வத்தை இழந்த, குற்ற உணர்ச்சியில் வாடும் விஷான்கவேல் ராஜமூர்த்தி (விஷான்) பற்றிய சுவாரசியமானக் கதை, ‘கள்வனைக் கண்டுப்பிடி’.

லிங்கேஸ்வரன் – பாஷினி சிவகுமார் – கே.எஸ்.மணியம் (கள்வனைக் கண்டுப்பிடி நடிக-நடிகையர்)

அவர் இறுதியாக ஒரு முறை அவளது ஆத்மாவுடன் தொடர்புக் கொள்ள முயற்சிக்கும் வேளையில் இறந்தவர்களுடன் பேசும் அமானுஷ்ய சக்திகளைப் பெறுகிறார். கொலை வழக்குகளைத் தீர்க்கும் ஒரு தனியார் துப்பறியும் நபராக அவர் ஒரு வேலையை ஏற்றுக் கொள்கிறார். அவ்வேளையில், ஓர் ஆத்மா விடுவிக்கப்பட்டு விஷானுக்கு எதிராக பழிவாங்க முற்படும்போது அமானுஷ்ய உலகில் விஷயங்கள் சிக்கலாகின்றன.

திங்கள் முதல் வெள்ளி வரை, ஜூலை 1 முதல் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் ‘கள்வனைக் கண்டுப்பிடி’ தொடரைக் கண்டு மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு, ஆஸ்ட்ரோவின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை வலம் வாருங்கள்.