Home கலை உலகம் ஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகள் – சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகள் – சிறப்பம்சங்கள்

778
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜூலை முதல் வாரம் தொடங்கி ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒளிபரப்பாகவிருக்கும் திரைப்படங்கள், நிகழ்ச்சிகளின் சில சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:

வெள்ளி, 3 ஜூலை முதல்…

இரும்பு மனிதன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை துல்லிய அலைவரிசை (எச்டி அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

நடிகர்கள்: சந்தோஷ் பிரதாப் & மதுசூதனா ராவ்

சாலையோரம் உணவகத்தை நடத்தும் ஒரு உன்னத மனம் கொண்ட சுந்தரம், தனது மூன்று வளர்ப்புக் குழந்தைகளுடன் வாழ்கிறார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3 (புதிய அத்தியாயம்)

ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), திங்கள்-வெள்ளி, இரவு 8.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்கள்: தீபக் & அஞ்சனா

பிரபலங்கள் ஜோடிகளாக இணையும் நடன ரியாலிட்டி நிகழ்ச்சி. திறமையான போட்டியாளர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்ததால் இந்நிகழ்ச்சி இரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ கிருஷ்ணா (புதிய அத்தியாயம்)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), சனி-ஞாயிறு, இரவு 8.00 மணி | ஆஸ்ட்ரோ கோவில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

பகவான் கிருஷ்ணர் ஒரு குறும்புத்தனம் கொண்ட குழந்தையாக வளர்வதோடு மதுரா மற்றும் துவாரகாவின் இளவரசராக இருக்கிறார். தீய சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒழிப்பதற்கும் மற்றும் அனைவருக்கும் நீதி வழங்குவதற்கும் அவர் பல சாகசங்களை புரிகிறார்.

சந்திரகாந்தா (புதிய அத்தியாயம்)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), சனி-ஞாயிறு, இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஷில்பா சக்லானி & ஊர்வசி தோலாகியா

விஜய்கரின் இளவரசி சந்திரகாந்தா தனது உண்மையான அடையாளத்தையும் கடந்த காலத்தையும் அறிந்திருக்கவில்லை. இருப்பினும், நவுகரின் இளவரசரான வீர் அவளது வாழ்க்கையில் நுழையும் போது, அவள் விதியை உணர்ந்து அதை நிறைவேற்றப் புறப்படுகிறாள்.

ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 3 (புதிய அத்தியாயம்)

ZEE தமிழ் எச்டி (அலைவரிசை 235), சனி-ஞாயிறு, மதியம்12 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்: கமல்

இந்த நிகழ்ச்சியில் திறமையான குழந்தைகள் நகைச்சுவை, நாடகம், சோகம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தங்கள் நடிப்புத் திறனை மேடையில் வெளிப்படுத்துவார்கள்.

திங்கள், 6 ஜூலை

தமிழ்லட்சுமி (புதிய அத்தியாயம் – 17)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை  201), திங்கள்-வியாழன், இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜஸ்மீன் மைக்கல், ஹேமாஜி & மூன் நிலா

தமிழ் லெட்சுமியைச் சந்தித்து மாயாவைப் பற்றின விபரங்களைச் சொல்கிறார். ஏமி தனது பழைய நண்பரை ஒரு சந்தையில் சந்திக்கிறார். கணேஷ் யாஷுவுடன் பேச முயற்சிக்கிறான். ஆனால் யாஷுவோ வழக்கத்தை விட மிகவும் கவலையாக உள்ளாள். மாயா முனியம்மாவின் தொலைபேசியைப் பயன்படுத்துவதோடு அவருக்கு உதவாததால் மாயாவை அவர் திட்டுகிறார். லெட்சு தனது சட்ட நிறுவனத்தில் மற்றொரு வாடிக்கையாளருடன் உரையாடுகிறார்.

கள்வனைக் கண்டுப்பிடி (புதிய அத்தியாயங்கள் – 5-9)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), திங்கள்-வெள்ளி, இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: லிங்கேஸ்வரன் மணியம் & பாஷினி சிவகுமார்

சதுர்வா அமோனைப் பற்றி விஷானை எச்சரிக்கிறார். இவ்விஷத்தில் அனிலை ஈடுபடுத்த வேண்டாம் என்று அவருக்கு நினைவூட்டுகிறார். பார்த்திபனின் வழக்கை விஷான் தீர்க்கிறார். பரம் டான்யாவைச் சந்திக்கும்போது ஏதோ சரியாக இல்லை என்பதனை உணர்கிறார்.

வியாழன், 9 ஜூலை

ஊஞ்சடா சமன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), 9pm

நடிகர்கள்: சன்னி சிங், மான்வி கக்ரூ, சௌராப் சுக்லா, கரிஷ்மா சர்மா & ஐஸ்வர்யா சகுஜா

திருமணமாகாத 30 வயதான வழுக்கையுடைய சமன் கோலி, ஒரு அழகான மனைவியைத் தேடுகிறார். ஒரு ஜோதிடர் தனக்கேற்ற ஒரு மனைவியை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என்றும் இல்லையேல் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்றும் ஒரு காலக்கெடுவை அளிக்கவே அவர் நிலைமை இன்னும் மோசமடைகிறது.

அதையும் தாண்டி புனிதமானது (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் – Astro First (அலைவரிசை 480)

நடிகர்கள்: வேமண்ணா அப்பன்னா, யுவராஜ் கிருஷ்ணசாமி, வனேசா க்ரூஸ் & சதிஸ் ராவ் சின்னயா

ஒரு புத்திசாலித்தனமான கருவுறுதல் கிளினிக் உரிமையாளர் ஒரு வேலையற்ற மற்றும் மகிழ்ச்சியான-அதிர்ஷ்டசாலி  இளைஞனை விந்து தானம் செய்ய ஒப்புக்கொள்ளச் செய்கிறார். ஆனால், அதன்பிறகு அந்த இளைஞனின்  வாழ்க்கை சிக்கலாகிறது.

வெள்ளி, 10 ஜூலை

செத்தும் ஆயிரம் பொன் (முதல் ஒளிப்பரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: நிவேதிதா சதீஷ், ராதா கிருஷ்ணன் & அவினாஷ் ரகுதேவன்

இந்தியாவில் ஒரு பண்டையத் துக்கச் சடங்குகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு பேத்தி மற்றும் அவரது பாட்டியை மையமாகக் கொண்ட ஒரு உணர்ச்சிபூர்வமான கதை.

சனி, 11 ஜூலை

அடுத்த சாட்டை (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.30 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சமுத்திரக்கனி, தம்பி ராமையா & அதுல்யா ரவி

ஒரு கல்லூரி பேராசிரியர் பெற்றோரிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாத தனது மாணவர்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார்.

நக்கீரன் – திருடர்கள் ஜாக்கிரதை (புதிய அத்தியாயம் – 11)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

வழிப்பறிக் கொள்ளை, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் என திருட்டு அல்லது கொள்ளை போன்ற குற்றவியல் பற்றிய  விவாதம். இவ்வத்தியாயங்கள் கொள்ளை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் நடக்கும் விரிவான திட்டமிடல் குறித்தும் கவனம் செலுத்தும்.

ஞாயிறு, 12 ஜூலை

குற்றம் குற்றமே – கோபத்தால் சாலையில் ஏற்படும் கடுங் குற்றங்கள் (புதிய அத்தியாயம் – 9)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

சாலையில் ஒரு ஓட்டுனரின் ஆத்திரத்தால் ஏற்படும் பின்விளைவுகள் – சோங், குணாவின் பாதையில் செல்லவே குணா விரைந்து செயல்பட்டதால் விபத்தைத் தடுக்க இயன்றது. இருவரும் சாலையில் சொற்கள் மற்றும் கை அசைவுகள் இரண்டையும் ஒரு காரிலிருந்து இன்னொரு காருக்கு பரிமாறிக்கொள்ளவே நிலமை இன்னும் மோசமடைந்தது. அவர்களின் நடவடிக்கைகள் மற்ற சாலை பயனர்களால் பதிவு செய்யப்பட்டன. குணா மற்றும் கீதா ஆகியோரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். தன் நடவடிக்கையின் பின்விளைவை எண்ணி அவர் வருந்தினார்.

குறிப்பு : நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை