Home கலை உலகம் ஆஸ்ட்ரோ கலர்ஸ் தமிழ் அலைவரிசை தொடர்களின் புதிய அத்தியாயங்கள் – புதிய தொடர்கள்

ஆஸ்ட்ரோ கலர்ஸ் தமிழ் அலைவரிசை தொடர்களின் புதிய அத்தியாயங்கள் – புதிய தொடர்கள்

833
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோவின் துல்லிய அலைவரிசை ஒளிபரப்புகளின் ஒன்றான கலர்ஸ் தமிழ் சில புதிய தொடர்களைத் தொடங்கவிருக்கிறது. சில தொடர்களின் புதிய அத்தியாயங்கள் குறித்த முன்னோட்டங்களையும் வெளியிட்டிருக்கிறது.

வெள்ளி, 12 ஜூன்

ஓவியா (புதிய அத்தியாயம் – 386)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), இரவு 7.30 மணி  | திங்கள்-வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

#TamilSchoolmychoice

இத்தொடர் வேறுபட்ட ஆளுமைகளைக் கொண்ட ஓவியா மற்றும் காயத்ரி இருவரைச் பற்றியக் கதையாகும். காதல் ஆசை அவர்களின் நீண்டகால நட்பைச் சோதிக்கின்றது.

அம்மன் (புதிய அத்தியாயம் – 61)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), இரவு 8.00 மணி | திங்கள்-வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

ஒரு அப்பாவி பெண் சக்தியின் கதையை மாய சக்தியுடன் சித்தரிக்கும் அமானுஷ்ய சம்பவங்களின் கதையமைப்போடு கூடிய தொடராகும் இது.

இதயத்தைத் திருடாதே (புதிய அத்தியாயம் – 45)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), இரவு 8.30 மணி | திங்கள்-வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விதி ஓர் ஒழுக்கமற்ற ஆணையும் ஒரு ஒழுக்கமான பெண்ணையும் திருமண பந்தத்தில் இணைக்கிறது. இருப்பினும், இருவரும் தங்கள் திருமணத்திற்காக காலம் விளைவிக்கும் சோதனைகளை எதிர்கொள்ள பல தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது.

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் (புதிய அத்தியாயம் – 60)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), இரவு 10.00 மணி  | திங்கள்-வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தனது குழந்தைப் பருவத்தில் பல கஷ்டங்களை எதிர்கொண்ட பிறகு, கோபத்திற்கு பெயர் பெற்ற சனி, தனது வழிகாட்டியான விஷ்ணு மற்றும் சிவபெருமானின் வழிகாட்டுதலை நாடுகிறார்.

ஞாயிறு, 14 ஜூன்

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), இரவு 8.00 மணி | சனி-ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

பகவான் கிருஷ்ணர் ஒரு குறும்புத்தனம் கொண்ட குழந்தையாக வளர்வதோடு மதுரா மற்றும் துவாரகாவின் இளவரசராக இருக்கிறார். தீய சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒழிப்பதற்கும் மற்றும் அனைவருக்கும் நீதி வழங்குவதற்கும் அவர் பல சாகசங்களை புரிகிறார்.

சந்திரகாந்தா (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்)

கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233), இரவு 9.00 மணி | சனி-ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விஜய்கரின் இளவரசி சந்திரகாந்தா தனது உண்மையான அடையாளத்தையும் கடந்த காலத்தையும் அறிந்திருக்கவில்லை. இருப்பினும், நவுகரின் இளவரசரான வீர் அவளது வாழ்க்கையில் நுழையும் போது, அவள் விதியை உணர்ந்து அதை நிறைவேற்றப் புறப்படுகிறாள்.