இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பிரபல கிரிக்கெட் வீரராக முத்திரை பதித்தவருமான இம்ரான் கான், சிறையில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து அவர் சிறைவைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையின் முன்னால் அவரின் சகோதரி ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்.
கடந்த 22 நாட்களாக இம்ரான்கானை அவரின் குடும்பத்தினர் யாரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்பதால் இம்ரான்கானின் உடல்நிலை குறித்த ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. பல சமூக ஊடகப் பதிவுகள் இம்ரான் கான் இராணுவத்தால் கொல்லப்பட்டதாக தெரிவித்தன.

