Home நிகழ்வுகள் பெண்களுக்கான பயிற்சி கருத்தரங்கம்

பெண்களுக்கான பயிற்சி கருத்தரங்கம்

722
0
SHARE
Ad

geethanjaliஷா ஆலம், மார்ச்.6- எதிர்வரும் 10.3.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ‘உன்னால் முடியும் பெண்ணே’ என்ற கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இக்ககருத்தரங்கம் ஷா ஆலம் ருக்குன் தெத்தாங்கா தாமான் மேவா முகிபா, பெர்மாத்தா ஏற்பாட்டில் பல் நோக்கு மண்டபத்தில் நிகழவுள்ளது. முற்றிலும் இலவசமாக நடைபெறும்  இந்நிகழ்வில் சுற்றுவட்டாரப் பெண்கள் கலந்து பயன் பெறலாம்.

நிகழ்வை மாநில மஇகா தலைவர் டத்தோ கே.எஸ். பாலகிருஷ்ணன் தொடக்கி வைப்பர். ஆஸ்ட்ரோ விழுதுகள் புகழ் திருமதி கீதாஞ்சலிஜி நிகழ்வை நிறைவுச் செய்து பரிசுகளை எடுத்து வழங்குவார்.

#TamilSchoolmychoice

மேல் விவரங்களுக்கு, ஜி.பி.சுப்பிரமணியம் (013-7691967) மற்றும் எல்.ராஜன் (014-2746401) ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.