Home Featured வணிகம் செப்டம்பர் 1 முதல் மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் செயல்படும் என அறிவிப்பு!

செப்டம்பர் 1 முதல் மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் செயல்படும் என அறிவிப்பு!

938
0
SHARE
Ad

MABகோலாலம்பூர் – மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம், சிவில் விமான போக்குவரத்துத் துறையிடம் இருந்து விமானங்களை இயக்குவதற்கான ஏர் ஆபரேட்டர் சான்றிதழை (AOC) வாங்கியுள்ளது. இதன் மூலம் மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட்(MAB) என்ற பெயரில் செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த சான்றிதழை, நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சகம், விமான நிறுவனத்திடம் வழங்கி உள்ளது.

இது குறித்து மாசின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் நோர் யூசப் கூறுகையில், “ஒரு புதிய பயணத்திற்கான ஆரம்பம் இங்கு தொடங்கி உள்ளது. மாப் நிறுவனத்தை, நாட்டின் தேசிய அடையாளமாக மாற்ற முயற்சி செய்வோம். எங்கள் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை அளிப்போம் என்று உறுதியுடன் கூறிக்கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிறிஸ்டோப் முல்லர் கூறுகையில், “சிவில் விமான போக்குவரத்தின் பொது இயக்குனர் டத்தோஸ்ரீ அசாருதீன் அப்துல் ரகுமானிற்கு நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். செப்டம்பர் முதல் மாப் நிறுவனம் மீண்டும் தொடங்க இருப்பது எங்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.