Home இந்தியா டில்லி ஒளரங்கசீப் சாலை, இனி அப்துல் கலாம் சாலை ஆகிறது!

டில்லி ஒளரங்கசீப் சாலை, இனி அப்துல் கலாம் சாலை ஆகிறது!

598
0
SHARE
Ad

apபுதுடில்லி – டில்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஒளரங்கசீப் சாலைக்கு அப்துல்கலாமின் பெயரைச் சூட்டவேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கெஜ்ரிவால் இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தகவல் பதிவு செய்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“புதுடெல்லி மாநகராட்சி சற்று நேரத்துக்கு முன்பாகத்தான், அவுரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் சாலை என்று பெயர் சூட்ட முடிவு செய்து இருக்கிறது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.