Home One Line P2 மறைந்த முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்ட விவேக்!

மறைந்த முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்ட விவேக்!

1011
0
SHARE
Ad

சென்னை: மறைந்த முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாமின் 88-வது பிறந்தநாள் இன்று (அக்டோபர் 15) அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலகளவில் தமது புகழை அறிவியல் துறையில் பதிவுச் செய்த அப்துல் காலமின் பிறந்தநாளை முன்னிட்டு நகைச்சுவை நடிகர் விவேக் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விவேக் இதுவரையிலும் மரக்கன்றுகள் நடுவது போன்ற சமூக சேவைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

நேற்று திங்கட்கிழமை அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விவேக் உருவாக்கிய #plantforkalam என்ற ஹேஷ்டேக் பரவலாகப் பகிரப்பட்டது. அது உலகளவிலும் பிரபலமடைந்தது.

#TamilSchoolmychoice

சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் மரம் நடும் விழாவில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை விவேக் நட்டு வைத்துள்ளார். விவேக்கின் இந்த செயலை பொதுமக்கள் மட்டுமின்றி கலையுலகத்தினரும் பாராட்டி வருகின்றனர்