Home கலை உலகம் நடிகர் விவேக் அஸ்தி புதைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன

நடிகர் விவேக் அஸ்தி புதைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன

681
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விவேக் கடந்த 1-ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்ததை அடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் விவேக் குடும்பத்தார் அவரின் அஸ்தியை அவரின் சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகில் இருக்கும் பெருங்கோட்டூருக்கு கொண்டு சென்றனர். அந்த கிராமத்தில் இருக்கும் அவரின் உறவினர்கள் விவேக்கின் அஸ்திக்கு மரியாதை செய்தார்கள்.

அதன் பிறகு அஸ்தியை குழி தோண்டி புதைத்து அந்த இடத்தில் மலர் தூவியதுடன் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். அந்த கன்றுகள் வளர்ந்து மரமாகி விவேக் நினைவாக நிற்கும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

தன் வாழ்நாளில் 33.23 இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்தவர் விவேக்.