Home Video கூலி : ரஜினி – டி.இராஜேந்தர் – அனிருத் கலக்கும் ‘சிக்கிடி’ முதல் பாடல் வெளியீடு!

கூலி : ரஜினி – டி.இராஜேந்தர் – அனிருத் கலக்கும் ‘சிக்கிடி’ முதல் பாடல் வெளியீடு!

48
0
SHARE
Ad

சென்னை: கமல்-சிம்பு நடித்த ‘தக் லைஃப்’ படத்திற்குப் பின்னர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘கூலி’. ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தியாவின் பிரபலமான மற்ற மொழி நடிகர்கள் இணையும் இந்தப் படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியீடு காண்கிறது.

அந்தப் படத்தின் முதல் பாடல் தற்போது படக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாசம் என்னவென்றால், அனிருத் இசையில் அவரே பாடி, நடனம் ஆடி நடித்திருக்கும் பாடல் காட்சியில் இன்னொரு கலக்கல் இணைப்பு டி.இராஜேந்தர். தன் பாணியில் இராஜேந்தர் நடனமாடி அந்தப் பாடலில் கலக்கியிருக்கிறார்.

ரஜினியும் சில காட்சிகளில் நடனமாடியிருக்கிறார். ஆனால் இராஜேந்தரும் ரஜினியும் ஒரு சேர தோன்றும் காட்சி எதுவும் பாடலில் இடம் பெறவில்லை. படத்தில் அத்தகைய காட்சி எதுவும் இடம் பெறுமா என்பது தெரியவில்லை.

#TamilSchoolmychoice

‘சிக்கிடி’ என்ற பெயரில் தொடங்கும் அந்தப் பாடலைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: