Home உலகம் அமெரிக்கா மலேசியாவுக்கான வரி விதிப்பை 25% ஆக உயர்த்தியது!

அமெரிக்கா மலேசியாவுக்கான வரி விதிப்பை 25% ஆக உயர்த்தியது!

38
0
SHARE
Ad
டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தபடி, வரி விதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள முதல் கட்ட 12 நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும். ஏற்கனவே, 24% வரிவிதிக்கப்பட்டிருந்த மலேசியாவுக்கு தற்போது கூடுதலாக 25% என வரி விதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் சில பொருட்களுக்கு முதலில் விதிக்கப்பட்ட 24% வரியை விட இது அதிகமானது. அந்த வரி 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது. அந்த கால அவகாசம் தற்போது முடிந்துவிட்டது.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், “மலேசியா, அமெரிக்கா தயாரிக்கும் பொருட்களுக்கு அதிக வரி விதித்தால், அதற்கு பதிலடியாக மேலும் 25% வரி விதிக்கப்படும்” என எச்சரித்தார்.

#TamilSchoolmychoice

ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமெரிக்கா, மலேசியா மீது 25% வரி விதிக்கத் தொடங்கும். இது, அமெரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் உள்ள வணிகப்  பற்றாக்குறையை நீக்க தேவையான அளவுக்குக் கூட இல்லையென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ட்ருத் சோஷியல்Truth Social தளத்தில் வெளியிட்ட கடிதத்தில், மலேசியா பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு எழுதிய டிரம்ப், “மலேசியாவின் தற்போதைய வணிகக் கொள்கைகள், அமெரிக்காவுடன் இருக்கும் வணிக உறவை ஒருதரப்பாகவும், சமநிலையற்றதாகவும் மாற்றியுள்ளது” என்றார்.

மலேசியா தன்னுடைய வணிகக் கொள்கைகளை மாற்றினால், 25% வரியை குறைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூடுதல் வரி ஏற்கனவே இருந்துள்ள துறைசார்ந்த வரிகளைத் தவிர்த்து தனிச்சிறப்பாக விதிக்கப்படும் என்றும், அதிக வரியைத் தவிர்க்க பிற நாடுகளின் வழியாக பொருட்களை அனுப்ப முயற்சித்தால், அதற்கும் உயர் வரி விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், “மலேசியாவில் பல வருடங்களாக நடந்துவரும் வரி மற்றும் வரி அல்லாத வணிகத் தடைகள், இந்தக் கட்டுப்படுத்த முடியாத வணிகப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. இதை சரிசெய்வதற்காகவே இந்த வரிகள் அவசியமானவை” என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், அமெரிக்காவுடன் உள்ள வணிக உறவை மலேசியா தொடரும் உறுதிப்பாட்டையும் டிரம்ப் வலியுறுத்தினார்.

அமெரிக்கா என்பது “உலகிலேயே முதலிடம் வகிக்கும் சந்தை” எனக் கூறிய அவர், அமெரிக்க பொருளாதாரத்தில் மலேசியாவின் பங்கு அதிகரிக்க வேண்டும் எனவும் ஊக்குவித்துள்ளார்.