Home நாடு அமெரிக்க வரிவிதிப்பு : சிறப்பு மலேசிய நாடாளுமன்றம் கூடியது!

அமெரிக்க வரிவிதிப்பு : சிறப்பு மலேசிய நாடாளுமன்றம் கூடியது!

64
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அமெரிக்காவின் விரிவிதிப்பு குறித்து விவாதிக்க மலேசிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று திங்கட்கிழமை (மே 5) நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கங்கள் உணரப்படுகின்றன. மலேசியாவிலும் அதன் பாதிப்புகள் இருக்கும் என்பதோடு இதுகுறித்து விவாதிக்க அமைச்சர் தெங்கு சாப்ருல் தலைமையிலான குழு ஒன்று அமெரிக்க அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.

அமெரிக்க வரி விதிப்பு குறித்து மலேசியா எடுக்கக் கூடிய சாத்தியமான பதில் நடவடிக்கைகள் மீதான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகளையும், ஆளும் மடானி ஒற்றுமை அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வியூகங்களையும் அறிந்து கொள்வதற்காக பிரதமர் அன்வார் இப்ராகிம் இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக நாடுகள் மீதான கூடுதல் வரிவிதிப்புகளை அறிவித்தார். எல்லா நாடுகளுக்கும் 10 விழுக்காடு அடிப்படை வரியை அறிவித்த டிரம்ப், மலேசியாவுக்கு பிரத்தியேகமாக கூடுதலாக 24 விழுக்காடு கூடுதல் வரியை விதித்தார்.