ஜெனிவா: இந்தியாவில் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பதற்கு பங்களிக்கும் என அஞ்சப்படும் கொவிட்-19 தொற்று பிறழ்வு இப்போது குறைந்தது 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம், இந்தியாவில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட பி1617 பிறழ்வு செவ்வாய்க்கிழமை நிலவரப்படி குறைந்தது 17 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறியது.
“பெரும்பாலான தகவல்கள் இந்தியா, பிரிட்டன் மற்றும் சிங்கப்பூரிலிருந்து பெறப்பட்டன,” என்று வாராந்திர தொற்றுநோயியல் புதுப்பிப்பில் சுகாதார நிறுவனம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிறழ்வு, அதன் அசல் பதிப்பை விட மிகவும் ஆபத்தானது. இது கொடியது மற்றும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியா தற்போது புதிய தொற்றுநோய்களால் அதிகமான இறப்புகளை எதிர்கொள்கிறது. மேலும், அடுத்த அச்சுறுத்தலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்த கவலைகளும் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் சமீபத்திய நோய்த்தொற்று சம்பவங்களில், கடந்த 24 மணி நேரத்திற்குள் மொத்தம் 350,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகளாவிய சம்பவங்களின் எண்னிக்கையை 147.7 மில்லியனாக அதிகரிக்கச் செய்தது. உலகளவில், இந்த தொற்று ஏற்கனவே 3.1 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது.