Home நாடு கோவிட்-19 நிபந்தனைகள் மேலும் தளர்வு – ஏப்ரல் 27-இல் அறிவிக்கப்படும்

கோவிட்-19 நிபந்தனைகள் மேலும் தளர்வு – ஏப்ரல் 27-இல் அறிவிக்கப்படும்

851
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : கோவிட்-19 தொடர்பிலான நிபந்தனைக் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக அகற்றப்படும் அல்லது தளர்வுகள் வழங்கப்படும் சூழ்நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (ஏப்ரல் 27-இல்) மேலும் கூடுதலான தளர்வுகளை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவிக்கவிருக்கிறார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 24) போர்ட்டிக்சனுக்கு வருகை மேற்கொண்ட கைரி இந்த அறிவிப்பை விடுத்தார். இது குறித்து பிரதமருக்குத் தெரிவித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி சில நாட்களுக்கு முன்னர் உரையாற்றும்போது கோவிட்-19 நிபந்தனைகளில் 3 முக்கிய அம்சங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.