கோலாலம்பூர் : அனைத்துலக அளவில் சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்திருக்கும் நாகேந்திரனுக்கான (படம்) தூக்குத் தண்டனை விவகாரத்தில், அவரைத் தூக்கிலிடக் கூடாது என்னும் கோரிக்கையோடு கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 23) ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
100-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர் என ஊடகங்கள் தெரிவித்தன. எனினும் 200 முதல் 300 பேர்வரை கலந்து கொண்டனர்.
நாகேந்திரன் அறிவாற்றலில் மிகவும் பின்தங்கியவர் என்பதால் அவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென மனித உரிமை இயக்கங்களும், வழக்கறிஞர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.