Home Photo News முத்து நெடுமாறன் குறித்த “உரு” – நூல் வாங்குவதற்கு…

முத்து நெடுமாறன் குறித்த “உரு” – நூல் வாங்குவதற்கு…

295
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27) மலேசியக் கணிஞர், முத்து நெடுமாறன் உருவாக்கிய ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் புதிய பதிப்பு வெளியீட்டு விழாவின் ஓர் அங்கமாக, முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களை விவரித்து தமிழ் நாட்டின் கோகிலா என்ற எழுத்தாளர் எழுதிய ‘உரு’ என்ற நூலும் வெளியீடு கண்டது.

முத்து நெடுமாறன் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களைத் தொகுத்து, சென்னையில் இருந்து வெளிவரும் ‘மெட்ராஸ் பேப்பர்’ என்ற இணைய ஊடகத்தில், தமிழ் நாட்டின் எழுத்தாளர் கோகிலா, ‘உரு’ என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடராக எழுதி வந்தார். அந்தக் கட்டுரைத் தொடர்தான் தற்போது அதே பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நூல் வெளியீடு கண்டது முதல், நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத பலரும் தொடர்பு கொண்டு இந்த நூலை எங்கு, எப்படி வாங்கலாம் என விசாரித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

வல்லினம் ஆசிரியர் ம.நவீன் ஏற்பாட்டில் இயங்கும் தமிழ் ஆசியா என்ற புலனக் குழுவின் மூலம் இந்த நூல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கீழ்க்காணும் இணைப்பின் மூலம் தொடர்பு கொண்டு இயங்கலை மூலமாக ‘உரு’ நூலை வாங்கலாம். அல்லது கீழ்க்காணும் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்:

https://tamilasiabooks.com/product/

தொடர்புக்கு: 012-5158314