Home உலகம் சிங்கப்பூர் பொதுத் தேர்தல்! எதிர்க்கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?

சிங்கப்பூர் பொதுத் தேர்தல்! எதிர்க்கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?

134
0
SHARE
Ad
லாரன்ஸ் வோங்

சிங்கப்பூர்: பொதுத் தேர்தல் என்பது எப்போதுமே சிங்கப்பூரில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஒரு விவகாரமல்ல! ஆளும் பிஏபி கட்சிதான் வெல்லும் என்பது வாக்களிக்கும் முன்பே முடிவான ஒன்று. எதிர்க்கட்சிகள் எத்தனை வாக்குகளை அள்ளுகின்றன – எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகின்றன – என்பதுதான் கணக்கு. ஒரு காலத்தில் நம் மலேசியாவிலும் இப்படித்தான் பொதுத் தேர்தல் நடந்தது. இப்போதோ நிலைமை மாறிவிட்டது.

நாளை சனிக்கிழமை (மே 3) சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 2.75 மில்லியன் மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கிறார்கள்.

211 வேட்பாளர்கள் போட்டியில் குதித்திருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

பிரதமராகப் பதவியேற்றபின் லாரன்ஸ் வோங் தலைமையில் நடக்கும் முதல் பொதுத்தேர்தல் இது. அவருடைய தலைமையிலான பிஏபி என்னும் மக்கள் செயல் கட்சி 32 புதிய வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் மீண்டும் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுகிறார்.

பிரதான எதிர்க்கட்சியான, தொழிலாளர் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் பொதுத் தேர்தலில் களம் காண்கின்றன.

வாழ்க்கைச் செலவினங்கள் உயர்ந்துள்ளதாக அதிருப்திகள் நிலவுகின்ற சூழ்நிலையில் – அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் – நிலைமையை எதிர்நோக்கியிருக்கும் சிங்கப்பூர் – பொதுத் தேர்தலைச் சந்திக்கிறது.

நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகளில் மாற்றம் செய்யப்பட்டதால், நாடாளுமன்றத் தொகுதிகள் 93-ல் இருந்து 97 ஆக அதிகரித்துள்ளன.

இளம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் சமூக ஊடகங்களில் அதிக மாற்றங்களை எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்த முறை வெளிநாடுகளில் 10 வாக்களிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.