Home நாடு பிகேஆர்: மணிவண்ணன் ஜெம்புல் தொகுதி மறுதேர்தலில் வெற்றி! உதவித் தலைவருக்குப் போட்டியா?

பிகேஆர்: மணிவண்ணன் ஜெம்புல் தொகுதி மறுதேர்தலில் வெற்றி! உதவித் தலைவருக்குப் போட்டியா?

77
0
SHARE
Ad
மணிவண்ணன் கோவின்

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் அந்தக் கட்சியில் அரசியல் வெப்பமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ரபிசி ரம்லியின் விடுமுறை நாடுமுழுவதும் பேசுபொருளாகியுள்ள வேளையில்

நான்கு பிகேஆர் தொகுதிகளுக்கு கட்சித் தலைமைத்துவம் மறு தேர்தலுக்கு உத்தரவிட்டது. அவற்றில் ஒன்று நெகிரி செம்பிலானில் உள்ள ஜெம்புல் தொகுதியாகும். முதல் முறை நடைபெற்ற தொகுதித் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மணிவண்ணன் கோவின் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வியடைந்தார். பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் கட்சி சார்பு அரசியல் செயலாளராக செயலாற்றி வருபவர் மணிவண்ணன். கடந்த 2013 பொதுத் தேர்தலில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றவர். 2018 பொதுத் தேர்தலில் ஊத்தான் மெலிந்தாங் (பேராக்) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.

#TamilSchoolmychoice

கடந்தாண்டு, பிகேஆர் கட்சிக்கான அரசியல் செயலாளர்களில் ஒருவராக மணிவண்ணனை நியமித்தார் அன்வார் இப்ராகிம்.

ஜெம்புல் தொகுதியின் தலைவராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் தேசிய நிலையிலான தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே, துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன், உலு சிலாங்கூர் தொகுதி தலைவர் டாக்டர் சத்தியபிரகாஷ் ஆகியோர் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் மணிவண்ணன் மூன்றாவது இந்திய வேட்பாளராக உதவித் தலைவர் பதவிக்கான போட்டியில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.