கோலாலம்பூர்: ஹரிராயா நோன்புப் பெருநாள் நாளை திங்கட்கிழமை (மார்ச் 31) கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மாமன்னரின் முத்திரைக் காப்பாளர் அலுவலகம் இன்று மாலை அறிவித்தது.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாமன்னர் தம்பதியர் அனைத்து முஸ்லீம் பெருமக்களுக்கும் தங்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் முஸ்லீம் பொதுமக்களுக்கு தனது பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இதற்கிடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரின் முக்கிய வீதிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடிக் கிடந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தொடங்கி 3 நாட்களுக்கு வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
வெள்ளிக்கிழமை முதற்கொண்டு மலாய்-முஸ்லீம் சகோதர இனத்தினர் நோன்புப் பெருநாளைக் கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கினர்.