கோலாலம்பூர்: மலேசியாவில் முஸ்லிம்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) நோன்பு தொடங்குவார்கள் என்று ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சைட் டேனியல் சைட் அகமட் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வானொலி தொலைக்காட்சிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அனைத்து மாநிலங்களுக்கும் நோன்பின் முதல் நாள் மலேசியாவின் மன்னர் அவர்களின் உத்தரவின்படி நிர்ணயிக்கப்பட்டதாகவும், இது ஆட்சியாளர்களின் ஒப்புதலுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சைட் டேனியல் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 29 இடங்களில் பிறை பார்க்கும் படலம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து நோன்புக்கான தொடக்க நாள் அறிவிக்கப்பட்டது.