Home நாடு மாமன்னர் நலமுடன் நாடு திரும்பினார்

மாமன்னர் நலமுடன் நாடு திரும்பினார்

72
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வெளிநாட்டில் சிகிச்சை பெறச் சென்ற மாமன்னர் சுல்தான் இப்ராகிம், நலமுடன் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 22) நாடு திரும்பினார். அவர் பயணம் செய்த சிறப்பு விமானம் இன்று காலை 7.00 மணியளவில் சுபாங் அரச மலேசிய விமானப் படைத் தளத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

அரண்மனை அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர். தனது உடல் நலத்திற்காக பிரார்த்தித்த அனைத்து மலேசியர்களுக்கும் மாமன்னர் தன் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சிகிச்சை பெற்றுவந்த காலகட்டத்தில் அவர் பாஹ்ரேனுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்தித்து நாட்டின் நிலவரங்கள் குறித்து விளக்கம் பெற்றார்.