Home நாடு சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் : மாமன்னர், பிரதமர் வாழ்த்து

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் : மாமன்னர், பிரதமர் வாழ்த்து

115
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவில் இன்று கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு மாமன்னர் சுல்தான் இப்ராகிம், அவரின் துணைவியார் ராஜா சாரித் சோபியா மற்றும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தம்பதியர் மலேசிய சீன சமூகத்தினருக்கு தங்களின் சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

சிலாங்கூர் சுல்தான் தம்பதியரும் தங்களின் சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைப் புலப்படுத்திக் கொண்டனர்.

பிறக்கின்ற சீனப்புத்தாண்டின் ஒவ்வோர் ஆண்டும் ஒரு விலங்கினத்தைக் குறிக்கும். இன்று தொடங்கும் சீனப் புத்தாண்டு பாம்புக்குரிய ஆண்டாகும்.

#TamilSchoolmychoice

சீனப்புத்தாண்டை முன்னிட்டு பெரும்பாலான மலேசியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் கோலாலம்பூரின் வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. வழக்கமான போக்குவரத்து நெரிசலையும் காண முடியவில்லை.

திங்கட்கிழமையும் செவ்வாயும் (ஜனவரி 27 & 28) சாலை சுங்கவரிக் கட்டணங்கள் 50 விழுக்காடு குறைக்கப்பட்டதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டும், தொடர்ச்சியாக வரும் விடுமுறையாலும் மலேசியர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதோடு, பலர் சுற்றுலாவும் சென்றிருக்கின்றனர்.

மசீச, ஆண்டுதோறும் பின்பற்றி வரும் பாரம்பரியப்படி இந்த முறையும் மசீச தலைமையகத்தில் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பை நடத்துகிறது.