புத்ரா ஜெயா: இதுவரையில் மலேசியர்கள் கொண்டாடும் முக்கியப் பெருநாட்களின்போது நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு முழுமையான டோல் என்னும் சாலை சுங்கச் சாவடிகளுக்கான கட்டணத்திலிருந்து அரசாங்கம் முழு விலக்கு அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது.
எதிர்வரும் ஜனவரி 29-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு இந்த முறை ஒரு மாற்றமாக, 50 விழுக்காடு கழிவு சாலை சுங்கச் சாவடிகளில் ஜனவரி 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் வழங்கப்படுகிறது.
இந்த சலுகையின் காரணமாக அரசாங்கம் ஏறத்தாழ 20.08 மில்லியன் ரிங்கிட் தொகையை நெடுஞ்சாலை நிறுவனங்களுக்கு இழப்பீடாக வழங்கும் என மதிப்பிடப்படுவதாக பொதுப்பணித் துறை அமைச்சர் நந்தா லிங்கி தெரிவித்தார்.